கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்தார் ‘புரட்சி தமிழன்’..!


கர்நாடகாவில் உள்ள சில கன்னட அமைப்புகள் பாகுபலி-2’வை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்தன.. காரணம் அதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சத்யராஜ், ஒன்பது வருடங்களுக்கு முன் காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசையும் காவிரி நீர் கொடுக்க கூடது என எதிர்த்த கலகக்காரர்களையும் கண்டித்து பேசினார்.

அந்த பிரச்சனையை இப்போது கையில் எடுத்துள்ள கன்னட அமைப்பினர், தான் பேசிய பேச்சுக்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அப்படி கேட்டால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்யவிடுவோம் என்றும் நிபந்தனை விதித்தனர்..

பாகுபலி 2 படம் கர்நாடகத்தில் பிரச்சினையின்றி ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, தற்போது கன்னட அமைப்புகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் புரட்சி தமிழன் சத்யராஜ்.. இதே சத்யராஜ் தான் ஒன்பது வருடங்களுக்கு முன் ‘குசேலன்’ பட ரிலீஸில் சிக்கல் வரக்கூடது என்பதற்காக, தான் பேசிய கடுமையான பேச்சுக்காக கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்தபோது அதை குறை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார். என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்..”

இதுதான் அப்போது சத்யராஜ் கூறிய வார்த்தைகள்..

எல்லாம் வெறும் வாய்ச்சொல் வீரம் தான் என்பதை இப்போது நிரூபித்து விட்டார் சத்யராஜ்.

Leave a Response