விஜய் 61 பட வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஏ.ஆர்.ரகுமான்

அட்லீ இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் 61 படத்தின் முதல்பார்வை ஜூன் 22 அன்று வெளியாகும், ஆகஸ்ட் மாதம் பாடல் வெளியீடு என்றும் 2017 தீபாவளி அன்று படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் 2, தீபாவளியன்று வெளிவருவதாகச் சொல்லியிருந்தார்கள். நேற்று அப்படம் 2018 ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

உடனே அந்த நாளில் விஜய் படத்தை வெளியிட தேனாண்டாள் நிறுவனம் முடிவு செய்துவிட்டது. விஜய்யும் இதை ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

விஜய் பட வெளியீடு தொடர்பான அறிவிப்பை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருப்பதால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Response