வவுனியாவில் மெர்சல் படத்துக்கு பெரிய கட் அவுட் – உணர்வாளர்கள் வேதனை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மெர்சல் படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், தமிழீழப்பகுதியான வவுனியாவில் மெர்சல் பட விளம்பரத்துக்காக ஐம்பது அடி உயரத்துக்கு நடிகர் விஜய்யின் வெட்டுரு (கட்அவுட்) வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பலத்த எதிர்ப்பு வருகிறது.

அடேங்கப்பா. நம்ம பசங்களா இப்படி பண்ணி இருக்காங்க,
நாங்கள் எல்லாம் தூக்கு மாட்டிக்கனும்
நானும் நினைச்சன் இம்முறை தியாகி திலீபன் அண்ணாவுக்கு இப்படி ஒரு கட்டவுட் செய்யலாம் என்று முடியாமல் போயிற்று என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது.
இந்த தம்பிமார்கள் எல்லாம் எப்பதான் எம் மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமா அஞ்சலி செலுத்தப்போறாங்களோ தெரியவில்லை.
விரைவில் பண்ணுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது

என்கிற அங்கலாய்ப்புகள் அதிகம் வருகின்றன.

கூடவே, ஒரு திரைப்பட விளம்பரத்துக்காக திரையரங்க உரிமையாளர் செய்யும் விளம்பரம் இது, எனவே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response