
ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்ததாக இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப்படத்தை ஆரஞ்சு மிட்டாய், றெக்க படங்களை தயாரித்த விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் தான் தயாரிக்கிறார்.. கிட்டத்தட்ட விஜய்சேதுபதி தயாரிப்பது போலத்தான்..
விஜய்சேதுபதி தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருப்பதால் மீண்டும் தனது நண்பர் கணேஷின் தயாரிப்பில் நடிக்க முடியவில்லை. அதனால் ஜி.வி.பிரகாஷை தானே தொடர்புகொண்டு இந்தப்படத்திற்கான கால்ஷீட் தேதிகளை வாங்கினாராம் விஜய்சேதுபதி..
இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க இருக்கிறார்.. பொங்கல் தினத்தன்று இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட இருக்கிறார்களாம்.


