
பாகுபலி படத்தின் வானளாவிய வெற்றி பற்றி நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதேசமயம் இந்தப்படத்தின் வெற்றியும், க்ளைமாக்சில் வைக்கப்பட்ட சஸ்பென்சும் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆவலை இன்னும் அதிகப்படுத்தின. கணக்கிட்டு பார்த்தால் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி ‘பாகுபலி’ படப்பிடிப்பு தொடங்கியது.. இடையிடையே எடுக்கப்பட்ட சின்னச்சின்ன ஒய்வுகளுக்கு பிறகு பாகுபலி-2வுக்கான ஓட்டம் மீண்டும் தொடங்கியது.
இதோ ஒருவழியாக இதில் பிரபாஸ் நடிக்கின்ற காட்சிகளுக்கான படப்பிடிப்பும் முடிவடைந்தது.. இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்றுடன் பிரபாஸ் படப்பிடிப்பு நிறைவுற்றது. 3.5 ஆண்டுகள் முடிந்தன. நன்றி டார்லிங். மற்றவர்களைக் காட்டிலும் இந்த படத்தின் மீது உனக்கு இருந்த நம்பிக்கை அதிகம்’ என்று பகிர்ந்துள்ளார்.


