
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி-3’ படம் பல இயற்கை தடைகளை கடந்து வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப்படம் சென்சார் போர்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டபோது. சில காட்சிகளை குறிப்பிட்டு, அதனால் யு/ஏ சான்றிதழ் தான் தரமுடியும் என சொல்லப்பட்டது.
ஆனால். இதில் திருப்தி அடையாத இயக்குனர் ஹரி, சென்சார் சொன்னபடி படத்தில் வெட்டவேண்டிய 5 நிமிட காட்சிகளை லாவகமாக நீக்கி மீண்டும் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்தனர். இதில் இந்தப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது படம் 2 மணி 35 நிமிடங்கள் உள்ளது.


