
25.10.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணியளவில் கோவை சுதந்தராபுரம் குறிச்சி சரஸ்வதி சிற்றரங்கில் கோயமுத்தூர்,பொள்ளாச்சி,தாராபுரம்,திருப்பூர்,மேட்டுப்பாளையம்,நீலமலை,கோபிசெட்டிபாளையம்,ஈரோடு திராவிடர்கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்,கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசி. நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.கோவை மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ப.வெற்றிவேல் கடவுள் மறுப்பு கூறினார்.கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று உரையாற்றினார்.
அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….
தமிழ்நாடு வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றுப் பெருமைகளில் ஒன்றாக 300 கோடி ரூபாய் செலவில் நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வு உட்பட வசதி வாய்ப்புகள் “எல்லோருக்கும் அறிவு” என்று பரப்பிடும் வண்ணம் திராவிட மாடல் ஆட்சியில் கோவையில் “பெரியார் அறிவுலகம்” உருவாக்கி சாதனைச் சரித்திரம் படைத்த திராவிட மாடல் நாயகர் மேனாள் முதலமைச்சர் திமுக தலைவர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 2026 நவம்பர்-4 புதன்கிழமை அன்று கோவையில் நன்றி பாராட்டுப் பெருவிழாவினை மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது,
பாராட்டு விழாவினை கோவையில் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.பாராட்டு விழாவில் பங்கேற்க நவம்பர் 4 கோவை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு தழுவிய அளவில் கழகத் தோழர்கள் அனை வரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


