தமிழ்நாடு முழுக்க மழை நிலவரம் – வானிலை மையம் அறிவிப்பு

வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்தத் தாழ்​வுப் பகுதி தொடர்ந்து வலுப்​பெற்று புய​லாக மாறக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.இதன் காரண​மாக தேனி,திண்​டுக்​கல்,மதுரை ஆகிய மாவட்​டங்​களுக்கு இன்று அதி​க​னமழைக்​கான சிவப்பு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு….

மத்​திய கிழக்கு,அதை ஒட்​டிய தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய காற்​றழுத்தத் தாழ்​வுப் பகுதி ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி​யாக வலுப்​பெற்​றுள்​ளது.இது மேலும் வலுப்​பெற்று காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலமாக அதே பகுதி​களில் நில​வக்​கூடும்.

மேலும் இது மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்​பெற்று,25 ஆம் தேதி (இன்று) ஆழ்ந்த காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலமாகவும்,26 ஆம் தேதி (நாளை) மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் புய​லாகவும் மாறக்​கூடும். இது தொடர்ந்து வலுப்​பெற்று மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் ஆந்​திரக் கடலோரப் பகுதிக்கு அருகே 28 ஆம் தேதி காலை நகர வாய்ப்பு உள்​ளது.

இதன் காரண​மாக இன்று தேனி,திண்​டுக்​கல்,மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி,
மின்​னல்,பலத்தகாற்றுடன் அதி​க​னமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்​யக்​கூடும்.கடலூர்,மயி​லாடு​துறை,
நாகப்​பட்​டினம்,திரு​வாரூர்,தஞ்​சாவூர்,புதுக்​கோட்டை,அரியலூர்,பெரம்​பலூர்,திருச்சி,கரூர்,நீல​கிரி,கோவை,
திருப்​பூர்,சிவகங்கை ஆகிய மாவட்​டங்​கள்,காரைக்​கால் பகுதி​களி​லும் ஓரிரு இடங்​களில் இடி,மின்​னல்,
பலத்த காற்​றுடன் கனமுதல் மிக கனமழை (ஆரஞ்சு எச்சரிக்கை) பெய்​யக்​கூடும்.

சென்னை,திரு​வள்​ளூர்,செங்​கல்​பட்டு,காஞ்​சிபுரம்,விழுப்​புரம்,கள்​ளக்​குறிச்சி,வேலூர்,இராணிப்​பேட்டை,
திருப்​பத்​தூர்,திரு​வண்​ணா​மலை,நாமக்​கல்,சேலம்,தரு​மபுரி,கிருஷ்ணகிரி,ஈரோடு,விருதுநகர்,கன்​னியாகுமரி ஆகிய மாவட்​டங்​களில் கனமழையும்,தென்​காசி,தூத்​துக்​குடி,இராம​நாத​புரம்,திருநெல்​வேலி ஆகிய மாவட்​டங்​களில்
மித​மான மழையும் பெய்​யக்​கூடும்.

26 ஆம் தேதி (நாளை) சிவகங்கை,இராம​நாத​புரம்,புதுக்​கோட்டை ஆகிய மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல்,பலத்த காற்​றுடன் கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும்.நீல​கிரி,கோவை,தேனி,மதுரை,திண்​டுக்​கல், விருதுநகர்,தென்​காசி,திருநெல்​வேலி,கன்​னியாகுமரி,தூத்​துக்​குடி ஆகிய மாவட்​டங்​களில் கனமழையும்,மற்ற மாவட்​டங்​களில் மித​மான மழையும் பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும்.நகரின் ஒருசில பகுதி​களில் இடி,மின்​னலுடன் மித​மானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Leave a Response