இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இளைஞரணி சார்பில் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னை எழும்பூரில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா,ராஜ் மோகன்,ஷாஜகான்,ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், மாநில துணைத்தலைவர் கே.நவாஸ்கனி பாமஉ,மாநில செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக்முகமது அலி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது….
2029 இல் எல்லோரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றே ஆகவேண்டும்.இந்தியாவினுடைய வெற்றி தமிழகத்தில் இருந்து உருவாக்கப்படும்.இதுதான் வரலாறாகப் போகிறது.இந்தியாவினுடைய வெற்றி மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றி.தமிழகத்தில் இருந்து உருவாக்கப்படும்.
இதை உடைப்பதற்குத்தான் புதிய நடிகர்கள் டெல்லியில் உட்கார்ந்திருக்கிறார்கள்.அதெல்லாம் ஒன்றும் நடக்காது.
எதை வேண்டுமானாலும் பார்ப்போம்.யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
எஸ்ஐஆர் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம்,நம்முடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணித்தனர்.மதச்சார்பற்ற கொள்கை என்று வரும்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்முடைய கூட்டணியில்தான் நிற்பார்கள்.எனவே எதிர்க்க வேண்டியவர்கள் கம்யூனிஸ்ட்களை அல்ல,மதச்சார்பின்மைக்கு யாரெல்லாம் எதிராக இருக்கிறார்களோ அவர்களைத்தான்.
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்,பிஜேபியும் டெல்லியும்.ஆனால்,தமிழ்நாட்டில் ஜெயிக்கபோறதும் இல்லை.ஜெயிக்கக்கூடிய வரலாறும் இல்லை.இதை உருவாக்கியது நமது தலைவர்கள்.அதேவழியில் நம்முடைய முதல்வர் விஜய்,எப்போதும் உறுதியாக இருப்பார்.எந்தக்காலத்திலும் பிஜேபியுடன் கூட்டணி கிடையாது என்று உறுதியாக இருப்பார்.நாங்கள் எப்போது பாஜகவுடன் எந்தக்காலத்திலும் உறவும் கிடையாது,கூட்டணியும் கிடையாது.உறுதியாகச் சொல்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரின் இந்தப்பேச்சில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்கிற தகவல் இருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.


