தநா சட்டமன்ற துணைத்தலைவர் நீக்கம்?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைத்தலைவராக இருக்கும் ரவிசங்கர் கடும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் குடிநீர் தட்டுப்பாடு, குப்பை போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக ரவிசங்கரிடம் புகாரளிக்கச் சென்ற கார்த்திக் என்ற நபரை,அவர் தாக்கிய காணொலி ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உடனே,சம்பந்தப்பட்ட அந்த நபர்,ரவிசங்கர் அருகில் அமர்ந்து,கூட்டநெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுதான் அந்த வீடியோ,ரவிசங்கர் என்னை அடிக்கவில்லை என்று பேட்டி கொடுத்தார்.

அதன்பின்,என்னை மிரட்டி அப்படி ஒரு வீடியோவை எடுத்தனர் என்று சொல்லி ஒரு காணொலியை அவரே வெளியிட்டார்.

அதனால்,ரவிசங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டது.அந்நிலையில்,சம்பந்தப்பட்ட நபர் மதுக்கடையில் மது வாங்குவது போன்ற காணொலியை காவல்துறை வெளியிட்டது.

இது ரவிசங்கருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மனு கொடுக்க வந்தவரை இரவில் தாக்கியதற்காக ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது இந்தச் செயலைக் கண்டித்தும் துறையூரில் திமுகவினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தாக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் வகையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது தவறான முன்னுதாரணம் என திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து துறையூர் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரவிசங்கர் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிலையில்,ரவிசங்கர் சட்டமன்ற துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்கிற யூகங்கள் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

Leave a Response