போலி நூல்கள் அகற்றம் – ஊழல் ஒளித்து வைப்பா?

அண்மையில் திறந்துவைக்கப்பட்ட கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.அதன்மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பெரியார் அறிவுலகத்துக்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும்,அதனைத் தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகார்கள் தொடர்பாக தமிழக அரசு விசாரித்து வருகிறது.இந்நிலையில்,முறைகேடு புகாருக்குள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள்,பெரியார் அறிவுலகத்தில் இருந்து நேற்று அகற்றப்பட்டன.

அறிவுலகத்தின் 4 ஆவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவிலும்,5 மற்றும் 6 ஆவது தளங்களில் ஆங்கில நூல்கள் பிரிவிலும் மேற்கண்ட பதிப்பகங்களின் ஏறத்தாழ 1,800 நூல்கள் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன.

அறிவுலகத்தின் 4-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவிலும், 5 மற்றும் 6-வது தளங்களில் ஆங்கில நூல்கள் பிரிவிலும் மேற்கண்ட பதிப்பகங்களின் ஏறத்தாழ 1,800 நூல்கள் அடுக்குகளிலிருந்து அகற்றப்பட்டன.அவற்றை பெட்டியில் வைத்து வாசகர்கள் படிக்க முடியாதபடி மூடிவைத்தனர்.

அரசின் அடுத்தகட்ட உத்தரவுக்கு பிறகு அந்நூல்கள் சென்னையில் உள்ள நூலகத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் அல்லது இங்கேயே விசாரணைக்காக பத்திரப்படுத்தி வைக்கப்படும் என அறிவுலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் திமுக ஊழல் செய்ததாக தவெகவும் தவெக ஊழல் செய்ததாக திமுகவும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில்,அந்நூல்களைப் படமெடுப்பது காணொலி எடுப்பது என்று வாசகர்கள் குவிந்து வந்த வேளையில் அந்நூல்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

இதனால்,அந்நூல்களில் உள்ள அபத்தங்கள் வெளிச்சத்துக்கு வருவது தடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால்,ஊழலை ஒளித்து வைக்கிறதா தவெக? என்கிற விமர்சனங்கள் பொதுவெளியில் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response