காவலர் சீருடையில் இந்தி – திமுக கடும் எதிர்ப்பு

லடாக்​கில் சீனப் படைகள் 1959 ஆம் ஆண்டு நடத்​திய தாக்​குதலில் வீரமரணம் அடைந்த ஒன்றிய ரிசர்வ் காவல்படை​யின் 10 வீரர்​கள் மற்​றும் தமிழக காவல்துறை​யில் பணி​யின்​போது உயி​ரிழந்த காவலர்​களின் தியாகத்தைப் போற்றி ஆண்​டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்​கப்​படுகிறது.

இதை​யொட்டி,தமிழ்நாடு காவல்துறை தலைவர் அலு​வலக வளாகத்​தில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில், காவலர் நினைவுச்சின்​னம் முன்பு முதல்​வர் விஜய் மலர்வளை​யம் வைத்து மரியாதை செலுத்​தினார்.காவல்துறை​யினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்​றார்.பின்னர் மரக்​கன்​றையும் நட்டு வைத்​தார்.முன்​னதாக,டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்,முப்​படை அதி​காரி​கள்,ஓய்வு பெற்ற காவல்துறை அதி​காரி​களும் மரியாதை செலுத்​தினர்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் அணிந்திருந்த சீருடையில்,ஆங்கில்ம்,இந்தி ஆகிய இருமொழிகளில் பெயர்ப்பட்டை (பேட்ஜ்) அணிந்திருந்தினர்.இது தமிழ்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்….

தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை.தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?காவல்துறை கொடிநாளில்,இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள Badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா?

காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை,அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா?அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றியஅரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?

தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை.

குறிப்பு: பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தைக் கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது.இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response