
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘ரம்மி’ ஆகிய படங்களில் நடித்த விஜய்சேதுபதி – காயத்ரி ஜோடி, மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் தான் ‘புரியாத புதிர்’. ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு முதலில் ‘மெல்லிசை’ என டைட்டில் வைக்கப்பட்டு பின்னர் சமீபத்தில் தான் ‘புரியாத புதிர்’ என மாற்றப்பட்டது..
படம் தயாராகியும் நீண்டகாலமாக விமோசனம் கிடைக்காமல் இருந்த இந்தப்படத்தை வரும் பொங்கல் ரிலீசாக வெளியிடுகிறார்கள். சாம் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ரமேஷ் திலக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ரெபெல் ஸ்டுடியோ தயாரிக்க ‘ஜே.எஸ்.கே பிலிம் கார்பொரேஷன்’ வெளியிடுகிறது.


