
இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தீ சென்னையில் 18.08.2026 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் நடத்த்து.
இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும், நாகாலாந்து – அருணாச்சலப்பிரதேசம் – மிசோரம் – மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க – மறுக்க “உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம்” (Inner Line Permit) வேண்டும்,இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், வரி வசூல் அதிகாரம் முழுவதும் மாநில அரசிடமே இருக்க வேண்டும், கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்,இன்று (18.08.2026) செவ்வாய் காலை 10 மணிக்கு,சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்றுப் பேசினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை,கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்.
ஆரியத்துவ ஒற்றை ஆட்சி முறையினைத் திணிக்காதே,மொழி இன அடையாளத்தை அழிக்காதே,இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றிடு,தமிழருக்குத் தன்னரசு!இனங்களின் கூட்டரசு! தமிழ்நாட்டில் தன்னரசு! இந்தியாவில் கூட்டரசு! தமிழ்நாட்டுக்கு அதுவே தேவை!,படைத்துறை – தகவல் தொடர்பு – வெளிநாட்டுறவு – பண அச்சடிப்பு நான்கு துறை அதிகாரம் மட்டும் இந்திய அரசுக்கு போதும்! மற்ற அதிகாரங்கள் அனைத்துமே மாநில அரசுக்கு வேண்டும்! வேண்டும்! என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து,பேரியக்கத் துணைத்தலைவர் க.முருகன்,துணைப்பொதுச்செயலாளர்கள் க.அருணபாரதி, வழக்கறிஞர் கோ.மாரிமுத்து,மகளிர் ஆயம் துணைத்தலைவர் செம்மலர்ச்செல்வி ஆகியோர் ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
தமிழர் தன்னுரிமைக் கழகத் தலைவர் பாவலர் இராமச்சந்திரன்,பாவலர் கீர்த்தி,தமிழின உணர்வாளர்
அ.பத்மநாபன்,அம்பத்தூர் தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் சிவ.செந்தமிழ்வாணன்,புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.செகநாதன்,ஆறாம்திணை மக்கள் இயக்கத் தலைவர் செகதீசன்,உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் பாவலர் தமிழுலகன்,வேலு சுபராசன் (உலகத் தமிழ் இயக்கம்) உள்ளிட்ட அமைப்புத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உடன் நின்றனர்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை வெற்றித்தமிழன்,தஞ்சை பழ.இராசேந்திரன், திருச்செந்தூர் மு.தமிழ்மணி,திருச்சி வே.க.இலக்குவன்,மூ.த.கவித்துவன்,பூதலூர் பி.தென்னவன்,புதுச்சேரி
இரா.வேல்சாமி,குடந்தை க.விடுதலைச்சுடர்,சாமிமலை க.தீந்தமிழன்,மதுரை கதிர்நிலவன்,மகளிர் ஆயம் தலைவர் அருணா,பொதுக்குழு உறுப்பினர்கள் சிதம்பரம் வேந்தன் சுரேசு,கோவை பாலகுமரன்,ஈரோடு குமரேசன், உடுமலைப்பேட்டை இராசேசு,தொரவி முருகன்,சீர்காழி அரவிந்தன்,சென்னை பழ.நல்.ஆறுமுகம்,அம்பத்தூர் செயலாளர் அன்புகிட்டு,ஆவடி செயலாளர் சுப்பிரமணியன்,தென்சென்னை செயலாளர் மு.கவியரசன், சைதாப்பேட்டை செயலாளர் முகிலன்,சென்னை நடுவண் கிளைச்செயலாளர் அமுதன்,தமிழ்க்கலை இலக்கியப் பேரவை பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன் உள்ளிட்ட தமிழ்நாடு – புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேரியக்கத்தினரும், நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


