எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்க வேலுமணி முயற்சி

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதர​வளிப்​ப​து குறித்து அதிமுகவில் இருவேறு கருத்துகள் உருவாகின.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,எதிர்நிலை எடுக்க,எஸ்​.பி.வேலுமணி,
சி.​வி.சண்​முகம் தலை​மையி​லான அணி தவெக அரசுக்கு ஆதவளித்​​தது.

அன்று முதலே அதி​முக இரு அணி​களாகச் செயல்​பட்டு வரு​கிறது.அப்​போ​து எழுந்த உள்​கட்சி பூசல் தற்போது வரை நீடித்துவருகிறது.பொதுத்தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க பொதுக்​குழுவைக் கூட்​டு​மாறு அதிருப்தி
அணி​யினர் வலி​யுறுத்​தினர்.

இதற்​கிடையே,அதி​முகவைச் சேர்ந்த 6 சமஉக்​கள் தங்​களது பதவி​களிலிருந்து விலகி,தவெக​வில் இணைந்​தனர். இவர்​களில் 2 பேர் இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​யும் பெற்​றனர்.கடந்த தேர்​தலில் வென்ற அதி​முக இந்த இரு தொகு​தி​களி​லும், இம்​முறை 3 ஆம் இடத்தைப் பிடித்​தது.

இதன்​தொடர்ச்​சி​யாக அதி​முக​வில் உட்​கட்சி பூசல் தீவிரமடைந்​துள்​ளது. இதற்கு மேல் எடப்பாடி பழனி​ச்சாமி
அதி​முக தலைமை பொறுப்பை வகிக்​கக்கூடாது என்​ப​தில் வேலுமணி தரப்பு உறு​தி​யாக உள்​ள​தாகத் தெரி​கிறது.

இந்​நிலை​யில்,கடந்த சில நாட்​களாக வேலுமணி,சண்​முகம் உள்​ளிட்ட அதிருப்தி சமஉக்​கள் அடுத்​தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோ​சித்​தனர்.

இதில் நாமும் பதவி விலகி, தவெக​வில் இணைந்து இடைத்​தேர்​தலை எதிர்​கொள்​ளலாமா? என
ஆலோ​சிக்​கப்​பட்​டதாகச் சொல்லப்பட்டது.

அப்படியில்லாமல்,போட்டி பொதுக்​குழுவைக் கூட்டி பொதுச்​செய​லா​ளர் பதவியி​லிருந்து எடப்பாடி பழனிச்​சாமியை நீக்​கி​விட்​டு,கட்​சி​யைக் கைப்​பற்றி தவெக அரசுக்கு அதி​முக சார்​பில் ஆதர​வளிப்​பது தொடர்​பாக இரகசியத் திட்​டம் தீட்டி வரு​வ​தாக​வும் பல்​வேறு மாவட்டச் செய​லா​ளர்​களை தொலைபேசி வழி​யாக தொடர்​பு​கொண்டு பேசி
வரு​வ​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதனால்,அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

Leave a Response