கபாலி படத்தை பார்க்க போட்டிபோட்ட மலையாள நட்சத்திரங்கள்..!

 

இன்று வெளியான கபாலி படத்தை தமிழ் சினிமா பிரபலங்களை விட அதிக ஆர்வத்துடன் மலையாள சினிமா பிரபலங்கள் வரவேற்றனர்.. அதுமட்டுமல்ல அதிகாலை காட்சிக்கே தியேட்டருக்கு படம் பார்க்கவும் வந்துவிட்டனர்.. இதில் நடிகர் ஜெயராம் அவரது மகன் காளிதாசுடன் காசி தியேட்டரில் 4 மணி ஷோ பார்க்க அதிகாலை இரண்டு மணிக்கே வந்துவிட்டார். இந்த கூட்டத்தையும் இந்த ஆரவாரத்தையும் என்ஜாய் பண்ணுவதற்காகவே முதல் காட்சிக்கு வந்தேன் என்று கூறினார் ஜெயராம்..

சத்யம், ஐநாக்ஸ் தியேட்டர் ரசிகர்களுக்கு ஒருவடக்கன் செல்பி’ மற்றும் ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்’ ஆகிய மலையாள படங்கள் மூலம் நன்கு பரிச்சயமான மலையாள இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசனும் நேற்று சென்னையில் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ரோகிணி தியேட்டரில் ‘கபாலி’ படத்தை கண்டுகளித்துள்ளார். அதேபோல நடிகர் நிவின்பாலியும் கேரளாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் காலைக்காட்சிக்கே சென்று அமர்ந்துவிட்டதை தியேட்டரில் இருந்தே அப்டேட் செய்திருந்தார்.

 

 

Leave a Response