சிவகார்த்திகேயனை கலாய்த்த மதன் கார்க்கி..!

 

பாடலாசிரியர் மதன் கார்க்கி பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர். எந்த விழாக்களில் கலந்துகொண்டாலும் தான் எழுதிய பாடல்கள், அது உருவான விதம், அதை பாடியவர்களின் பங்களிப்பு குறித்து மட்டுமே சிலாகித்து பேசுவார். அப்பட்டிப்பட்டவர் சிவகார்த்திகேயனை அவர் அமர்ந்திருந்த மேடையிலேயே வைத்து கிண்டலடித்த சுவாரஸ்ய நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்தது.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.. இதில் தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் மூவரும் கலந்துகொண்டனர்.. இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார் மதன் கார்க்கி..

மேடையில் அவர் பேசும்போது, “இவ்வளவு பிரமாண்டமாக நடக்கும் விழாவில் மேடையில் ஒரு பெண் கூட இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன் அந்த குறையை சரிசெய்துவிட்டார்.. இனிமே யாரேனும் விழா நடத்தும்போது ஹீரோயின் யாராவது வரவில்லை என்றால் சிவகார்த்திகேயனை பெண் வேடமிட்டு அழைத்து கொள்ளலாம்” என்றார்..

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸாக பெண் வேடத்தில் நடித்து வருகிறார் இல்லையா..? அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் தத்ரூபமாக பெண் போலவே இருப்பதை பார்த்து தான் அப்படி கலாய்த்துள்ளார் மதன் கார்க்கி.

 

 

Leave a Response