ட்விட்டர் நீக்கம் குறித்து ரஜினி விளக்கம்

மார்ச் 22 ஆம் தேதி சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

அதற்காக, தற்போது கரோனா வைரஸால் இத்தாலியில் நடந்த பாதிப்பு நமக்கும் வந்துவிடக் கூடாது. ஆகையால் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ரஜினி வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

ரஜினி வீடியோவில் கரோனா வைரஸ் பற்றி கூறிய தகவல்கள் உறுதியானவை என கருத முடியாததால் அவரது காணொலியை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. அதோடு அவர் அது யூடியூபில் இருக்கிறது என்று சொன்ன ட்விட்டையும் அந்நிறுவனம் நீக்கியது.

இதனால் தவறான தகவலைப் பரப்பியதாக கடும் விமர்சனத்துக்கு ஆளானார் ரஜினி.

எனவே அதற்கு விளக்கமளுக்கும் விதமாக அவர் எழுதியுள்ள பதிவில்…

நேற்று பதிவு செய்த காணொளியில் 12- 14 மணி நேரம் மக்கள் வெளீயில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடை பட்டு, சூழல் மூன்றாவது நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால் அது, இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும் என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம்வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்தக் கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தைச் செலுத்துவோம்.

இவ்வெளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response