
14 ஏப்ரல் 1992 கலாநிதிமாறனால் தொடங்கப்பட்ட நிறுவனம் சன் குழுமம்.இந்நிறுவனம்,தமிழ்நாட்டில் சன்,மலையாளத்தில் சூர்யா,கன்னடத்தில் உதயா உட்பட பல்வேறு மொழிகளில் பல்வேறு வகையான தொலைக்காட்சிகளையும் வானொலி அலைவரிசைகளையும் நிர்வகித்து வருகிறது.எல்லா மொழிகள் மற்றும் எல்லாவகைகளிலும் சுமார் 42 தொலைக்காட்சிகளை அந்நிறுவனம் நடத்திவருகிறது.
தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருக்கும் சன் தொலைக்காட்சி மற்றும் அனைத்து மொழி தொலைக்காட்சிகளையும் முழுமையாக விற்பனை செய்யப்படவிருக்கிறது என்கிற தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.
இந்த ஒட்டுமொத்த தொலைக்காட்சிகளையும் இந்தியாவின் அதானி குழுமம்,வெளிநாட்டில் இயங்கும் அல்ஜசீரா குழுமம் ஆகிய நிறுவனங்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிட பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சன் நியூஸ் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் உள்ள 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிகளை மட்டும் கைவசம் வைத்துக் கொண்டு மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் விற்பனை செய்வது என்று கலாநிதிமாறன் முடிவெடுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம்,அதானி குழுமம்,அல்ஜசீரா ஆகிய நிறுவனங்கள்,செய்தித் தொலைக்காட்சிகள் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களாம்.
இதுதொடர்பான பேச்சுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன என்கிற தகவல் தொலைக்காட்சித் துறையில் பெரும்பேசுபொருளாக இருக்கிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை எதுவும் இல்லை.எனினும் சன்குழும குடும்பத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் நல்ல காரியம் நிறைவடைந்த பிறகு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.


