நீங்கள் போகுமிடமெல்லாம் துயரம்தான் விஜய் அங்கிள் – இளைஞர்கள் விமர்சனம்

கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

கரூர் கொடுந்துயரம் நடந்து மூன்று நாட்கள் கழித்து சாவகாசமாக வெளியிட்ட காணொலியில்,
கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று கேட்டிருக்கிறார் விஜய்.

மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞன் இறந்தான்

நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி.4 பேர் கவலைக்கிடமாக இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது…

விக்கிரவாண்டியில் 400 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை

நாகை உள்ளிட்ட விஜய் போன எல்லா இடங்களிலுமே கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கினர்.

இந்த நெரிசலை அவர்களே திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்று அவர்கள் கட்சியினரே முணுமுணுக்கிறார்கள்.

இந்நிலையில் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று கொஞ்சமும் மனச் சான்றின்றி கேட்டிருக்கிறார் நன்றி கெட்ட விஜய் என்று சமூகவலைதளங்களில் கடுமையான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன.

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியால்தான் இப்படி நடந்தது என்று சொல்வதன் மூலம் பாஜகவின் எண்ணத்தைப் பிரதிபலித்திருக்கிறார் இதன்மூலம் இவர் யார்? என்பதும் தெளிவாகிறது என்றும் விமர்சனங்கள் வ்ந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் போகுமிடமெல்லாம் துயரம்தான் விஜய் அங்கிள் என்று இளைஞர்கள் விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றனர்.

Leave a Response