ரஜினியை வைத்து திரையுலகிலும் காவி அரசியல் – விஷால் படத்தயாரிப்பாளரால் சர்ச்சை

தீபாவளியையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள ஒரு குரல்பதிவில், ஓடிடி தளத்தில் எங்கள் எனிமி படத்தை வெளியிட நல்ல வாய்ப்பு இருந்தபோதும் திரையரங்குகளில்தான் படத்தை வெளியிடவேண்டும் என்கிற உறுதி எடுத்தோம். அதன்படி நவம்பர் 4 தீபாவளி நாளில் திரைக்கு வரவிருக்கிறோம். ஆனால் எங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்கிற சூழல் இருப்பதாக அறிகிறேன்.

இதனால், நான் சார்ந்திருக்கும் சங்கம் சார்பானவர்கள் எங்களுக்கு 250 திரையரங்குகள் கிடைக்க உதவவேண்டும்.
தீபாவளி போன்றதொரு பெரிய பண்டிகையின்போது இரண்டு படங்கள் வந்தாலும் இரண்டும் இலாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் 900 திரையரங்குகளில் திரையிட்டால் இரண்டாவது நாளே கூட்டம் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம்.

இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

அவர் நேரடியாக அண்ணாத்த படத்துக்கு 900 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள் எங்களுக்கு நூற்றுச்சொச்சம் திரையரங்குகள்தாம் கிடைக்கும்போல் தெரிகிறது என்று சொல்லவில்லையென்றாலும் அவர் பேச்சின் சாரம் அதுதான்.

அவருடைய இந்தப்பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில்,

எனிமி தயாரிப்பாளர் பாஜக-வைச் சேர்ந்த சங்கி.ரஜினி படத்தில் சன்டிவியும் ரெட்ஜெயன்ட்டும் சம்பந்தப்பட்டிருப்பதால் தியேட்டர் கிடைக்கவில்லை என்கிற புரளியைக் கிளப்பி சங்கி சேட்டைகளை திரையுலகிலும் செய்யப் பார்க்கிறார்.தனுஷின் ஆபீஸில் வேலை செய்து கோடிகளைச் சுருட்டி ப்ருட்யூசரான இந்த காவி.

என்கிற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் உலாவருகின்றன.

திரையுலகிலும் பாஜககாரர் அரசியல் செய்து சிக்கலை உண்டாக்குகிறார் என்பது மிகவும் ஆபத்தான போக்கு என்கிற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.

Leave a Response