15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை விவாதம் நடந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு ஜூன் 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார்.
ஜூலை 21 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதன்படி,
திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி
தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 கோடி.
மொத்த நிதிபற்றாக்குறை ரூ.40,533.84 கோடி.
இது தவிர, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்லாயிரம் கோடிகளில் தொடங்கி, பல நூறு கோடிகள் வரை ஒவ்வொரு துறையின் தேவையைப் பொறுத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ. 890 கோடியும், விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 487 கோடியே 45 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், தமிழ் வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு தெரியுமா? ரூ.32 கோடி.
இருப்பதிலேயே மிகக்குறைந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் துறைக்குத் தான்.
அதிமுக ஆட்சியில் தமிழுக்கு இவ்வளவுதான் மதிப்பா? என்று தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.