பிக்பாஸ் நிகழ்ச்சி ஏமாற்று வேலையா? கமலும் துணை போகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சி நடிகை ஐஸ்வர்யாதத்தாவுக்கு அனுசரணையாக நேயர்களின் வாக்குகளில் தில்லுமுல்லு செய்வதாக நம்பப்படுகிறது. வெளிப்படையாகவே ஐஸ்வர்யா நிகழ்ச்சியில் தொடர்வதற்கு ஏதுவாக அவர் நாமினேஷனில் மாட்டுவதை தவிர்க்கும் வகையில் நிகழ்ச்சியை ‘பிக்பாஸ்’ வடிவமைத்திருந்தது. இது தொடர்பாக கமலுக்கும், பிக்பாஸ் அமைப்பாளர்களுக்கும் கூட இரண்டு வாரங்களுக்கு முன்பு சின்ன உரசல் ஏற்பட்டதாக தகவல்.

இந்நிலையில்,

கலாட்டா டாட் காம் நிறுவனர் மற்றும் இயக்குநரான வெங்கடேஷ், நேற்று மதியமே (செப்டம்பர் 21) இந்தவார வெளியேற்றத்தில் இருந்து ஐஸ்வர்யா தத்தா தப்பித்திருப்பதாக ட்விட் செய்திருக்கிறார். உண்மையில் நேற்று இரவு 12 மணி வரை நேயர்களின் வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. அப்படி இருக்கையில் முன்கூட்டியே ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார் என்று இவர் உறுதியாக சொல்வது, பிக்பாஸ் குழுவினர் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

ஒருவேளை ஐஸ்வர்யா இந்தவார வெளியேற்றத்தில் இல்லையென்றால் பிக்பாஸ் என்கிற நிகழ்ச்சியே நூறு நாட்களாக நேயர்களை ஏமாற்றிவந்த தில்லாலங்கடி நிகழ்ச்சி என்பது உறுதியாகிவிடும்.

இந்த மோசடிக்கு கமல்ஹாசனும் துணைபோனதாக மக்கள் கருதக்கூடிய சூழல் ஏற்படும். சாதாரண டிவி நிகழ்ச்சியிலேயே ஊழலைத் தடுத்து நிறுத்த முடியாதவர், நாட்டை என்னத்தை திருத்துவார் என்கிற பொது அபிப்ராயம் உருவாகும்.

– யுவகிருஷ்ணா

Leave a Response