பாஜகவிலிருந்து விலகிய நடிகை – தோல்வி பயம் காரணமா?

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள காயத்ரி ரகுராம்,இப்போது நடன இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

அதன்பின் பா.ஜ.க-வில் இணைந்து காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் அரசியிலில் இருந்து விலகுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், வெறும் வாக்குவாதங்களும் மற்றவர்களைக் குறை சொல்வதுமாக அரசியல் களம் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. சிறுபிள்ளைகளின் சண்டை போல் இருக்கிறது.

சினிமாவை விட அரசியலில் அதிக நடிகர் உள்ளனர். போராளிகள், தலைவர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் போலியாகவே உள்ளனர். என்னால் முழு நேரமும் நடித்து கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது உண்மையுடனும், விஸ்வாசத்துடனும் இருப்பேன்.

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, சுயநலம் என எல்லாம் எதிர்மறை எண்ணங்களாகவே உள்ளது. நான் அரசியலில் இருந்து விலகி, வெளியிலிருந்து எது சரி, எது தவறு ஆராய்ந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இப்போதைக்கு நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு

இவ்வாறு காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

நடைபெறும் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்கிற கருத்துகள் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. அதனாலேயே காயத்ரி ரகுராம் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.

Leave a Response