துறை மாற்றம் – கே.ஏ.செங்கோட்டையன் கடும் அதிருப்தி

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது.

முதல்வராக விஜய் மே 10 ஆம் தேதி பொறுப்பேற்றார்.அவருடன்,என்.ஆனந்த்,ஆதவ் அர்ஜுனா,அருண்ராஜ், செங்கோட்டையன்,வெங்கடரமணன்,நிர்மல்குமார்,ராஜ்மோகன்,பிரபு,கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மே 13 அன்று,சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில்,அதிமுகவின் 25
சமஉக்களும் ஆதரவு அளித்தனர்.முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், காங்கிரசுக் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சரவையில் இடம்பெறும் 23 சமஉக்கள் பட்டியலை ஆளுநர் மாளிகை நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. முதல்வர் விஜய் காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். புதிய அமைச்சர்களை ஆளுநர் அர்லேகருக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, ஸ்ரீநாத் (தூத்துக்குடி),கமலி.எஸ்.(அவிநாசி),சி.விஜயலட்சுமி(குமாரபாளையம்),ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்),வினோத் (கும்பகோணம்),ராஜீவ் (திருவாடானை),பி.ராஜ்குமார் (கடலூர்),வி.காந்திராஜ் (அரக்கோணம்),மதன் ராஜா.பி (ஓட்டப்பிடாரம்),ஜெகதீஸ்வரி.கே (ராஜபாளையம்),ராஜேஷ்குமார்.எஸ் (கிள்ளியூர்),எம்.விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு),லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி(ராசிபுரம்),விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ(சேலம் தெற்கு),ரமேஷ் (ஸ்ரீரங்கம்),பி.விஸ்வநாதன் (மேலூர்),குமார்.ஆர் (வேளச்சேரி), தென்னரசு.கே(பெரும்புதூர்),வி.சம்பத்குமார்(கோவை வடக்கு),முகமது பர்வேஸ்(அறந்தாங்கி),டி.சரத்குமார் (தாம்பரம்),என்.மரிய வில்சன்(ஆர்.கே.நகர்),விக்னேஷ்.கே (கிணத்துக்கடவு) ஆகிய 23 சமஉக்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

நேற்றைய விரிவாக்கத்தின்போது, சிலரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன.இதில்,அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித்துறைக்குப் பதில்,வருவாய்த் துறையும், அமைச்சர் நிர்மல்குமார் வசமிருந்த சட்டப்பேரவை விவகாரங்கள் துறையும் வழங்கப்பட்டுள்ளது.நிதித்துறை ஆர்கேநகர் மரியவில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.மூத்த அரசியல் தலைவர், அதிக அனுபவம் கொண்ட தனக்குக் கொடுக்கப்பட்ட துறையை மூன்று நாட்களுக்குள் மாற்றி அதில் அரசியல் அனுபவமே இல்லாத தன் உறவினரை விஜய் நியமித்திருப்பதால் அவர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

Leave a Response