கமல் சீமான் சந்திப்பு – இருவரும் இணைகிறார்களா?

நடிகர் கமல்ஹாசன் நாளை (புதன்கிழமை) புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார். இதையொட்டி அவர் அரசியல் கட்சி தலைவர்கள், தன்னுடைய நலம் விரும்பிகளை சந்தித்து பேசி வருகிறார்.

நேற்று, அரசியலில் தனிக்கட்சி தொடங்கிய பாக்யராஜ், தனிக்கட்சி நடத்தி வரும் டி.ராஜேந்தர் ஆகியோரிடம் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக பேசினார். தான் தனிக்கட்சி தொடங்கிய பிறகு நேரில் சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கமல்ஹாசனை இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

படிக்கும்போதே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தேன்; தமிழகத்தில் எந்த வகையிலாவது மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறேன்.கமலின் பயணம் புரட்சிகரமாக, வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்; கமல் என்னை வந்து சந்திப்பதை விட நானே நேரில் சந்திப்பதற்காக வந்தேன்.

அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

தமிழகம் மிக மோசமான சூழலில் உள்ள நிலையில், மாற்றத்தைக் கொண்டுவர நடிகர் கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும்.

கமல்ஹாசன் என்னைச் சந்திக்க விரும்பினார் அதனால் நான் அவரைச் சந்தித்தேன் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க விரும்பினால் அவரையும் சந்திப்பேன்.

மக்களுக்கு நன்மை செய்வதே இருவரின் நோக்கம்.

நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

சீமானுக்கு என்னைத் தெரியும், எனது சினிமாவை தெரியும்; ஆனால் எனது கொள்கை தெரியாது. எனது கொள்கை அவருக்கு முழுமையாக தெரியாத நிலையில் இப்போது ஆதரவு பற்றி கேட்பது சரியல்ல.

அதிமுக தலைவர்கள் யாரையும் நான் சந்திக்கப் போவதில்லை. இந்த ஆட்சி சரியில்லை எனக் கூறும் நான் எப்படி அதிமுக தலைவர்களை சந்திக்க முடியும் என கூறினார்.

Leave a Response