குஜராத்தில் பாஜகவுக்குப் பின்னடைவு

குஜராத் மாநிலத்தில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், முந்தைய தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்த நிலையில் குஜராத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்தது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 19 அன்று எண்ணப்பட்டடன.

தேர்தல் முடிவுகளில், பாஜக 47-ல் வெற்றி பெற்றுள்ளது. 16 இடங்களில் காங்கிரஸ் வென்றது. ஆறு இடங்களில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நான்கு இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது ஆளும் பாஜகவை விடவும், காங்கிரஸ் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

12 நகராட்சிகளை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளதால் பாஜக்வினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Leave a Response