விசுவாசத்திற்காக மீண்டும் ஒரு மங்காத்தா கூட்டணி..!


அஜீத்தின் 50வது படமான ‘மங்காத்தா’ பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தப்படத்தில் அஜீத்துடன் இணைந்து அர்ஜூன் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது இவர்கள் இருவரும் சிவா இயக்கத்தில், அஜீத் நான்காவது முறையாக நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர் என்ற செய்தி கசிந்துள்ளது..

அனேகமாக அர்ஜூன் வில்லனாக நடிக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ‘விசுவாசம்’ படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். முதன்முறையாக டி.இமான் இசையமைக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Leave a Response