தேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு?

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

நடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவரின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

அறிக்கையில், “பொதுவாக நான் விளக்க அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. என் வேலை என்னை முன்னிறுத்தும். முதலாவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள். ராதாரவி அவர்களின் வெறுக்கும் வகையிலான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகள்.

நயன்தாராவின் இந்த அறிக்கை தி மு க வுக்கு பெரும் நன்மதிப்பை கொடுத்துள்ளது.

இது தொடக்கம்தான் அடுத்து தேர்தலில் தி மு க வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று சில தி மு க வினர் கூறிவருகின்றனர்.

Leave a Response