20 பந்துகளில் 7 விக்கெட் – ஏறி அடித்த பஞ்சாப்

ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 184 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

குறிப்பாக கடைசி 20 பந்துகளில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் பஞ்சாப் அணி வென்ற முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response