பந்து வீச்சில் கலக்கினாலும் இறுதிவரை பதற வைத்த சென்னை

ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆகியன மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 44(26), அம்பத்தி ராயுடு 5(5) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 30(16) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவர்களை தொடந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 27(33) ரன்கள் குவித்து இறுதி ஓவரில் வெளியேறினார்.

மறுமுனையில் தோனி 32(35) ரன்களுடன் காத்திருக்க, இறுதியாக களமிறங்கிய பிராவோ 4(3) ரன்கள் குவித்து ஆட்டத்தின் 19.3-வது பந்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

டெல்லி அணி தரப்பில் அமித் மிஷ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் வெற்றியின் மூலம் சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Leave a Response