வைகோ அங்க போயிட்டாருல்ல அவர் முடிஞ்சார் – ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம்,சமயநல்லூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது….

பழநிக்குப் போய் மொட்டை போட்டது போயி,பழநிக்கே ஒருத்தன் மொட்டை போட்டு இருக்கிறான்னா,அது தவெக அமைச்சர் ரமேஷ்.அடேய் ரமேஷ்,நீ பெரிய தில்லாலங்கடி.நீ வேகமா பேசும்போதே நினைச்சேன்,நீ ஏதோ செய்யப் போறேன்னு…? டக்குனு அசந்த நேரத்துல பழநி கோயில் 100 கோடி ரூபாய் சொத்தை எடுத்து பினாமில பதிஞ்சிட்டான்.ஆட்சிக்கு வந்து 75 நாள் கூட ஆகல.அதுக்குள்ள சிபிசிஐடி ரைடு என தமிழ்நாடு முழுவதும் பத்தி எரியுது.ஆனால் அமைச்சரோ சிறு தவறுதான் நடந்திருக்கு என கூறுகிறார்.ஊழலுக்கும்,தவறுக்கும் வித்தியாசம் தெரியாம பேசக்கூடாது.

கேரள நடிகர் ஒருத்தர் பேசுறாரு..நான் முதலமைச்சராக வருகிறபோது என்னோடு நடித்த அந்த நடிகை நல்லா சேலை கட்டி வந்து முன்வரிசையிலே உட்கார்ந்து கண்கலங்கி அந்தக் காட்சியை பார்க்கவேண்டும் என்கிறார். நையாண்டி தோரணையில் அவர் பேசியிருந்தாலும்,இது விஜய் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவை நையாண்டி, நக்கல் செய்ததாக எண்ணி நாம் கடந்துபோக விடமுடியாது.ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தலைகுனிவு இது. ஏன்னா அந்த விழாவுல குடும்பத்தில் இருக்கிறவங்க வந்து முன்வரிசையிலே உட்கார்ந்து வாழ்த்து சொல்லி இருந்தாங்கன்னா,கேரள நடிகர் இன்றைக்கு நம்மளை கேலி பேசியிருக்க மாட்டார்.இந்த தமிழ்நாட்டுக்கு ஏன் தலைகுனிவை ஏற்படுத்தி தருகிறீர்கள்?.

தவெக கூட்டணிக்கு எங்க அண்ணன் வைகோ போயிட்டாருல.இனி நமக்கு கவலையே இல்லை.விஜய்யை முடிக்காம வரமாட்டார்.முடிச்சுட்டுத்தான் வருவார்.அவர்,அதிமுக மற்றும் திமுகவோடு நான் கூட்டணி வச்சது நான் செஞ்ச ரெண்டு தப்புன்னு சொல்றார்.விஜய் அவர்களே…எச்சரிக்கையா இருங்க.நீங்க வாழ்க்கையிலே செஞ்ச மிகப்பெரிய தப்பு இந்த வைகோவை,தவெக கூட்டணியிலே சேர்த்ததுதான்.அவர் உங்களை முடிக்காம விடவே மாட்டார்.இப்படித்தான் விஜயகாந்தை முடித்தார்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response