இலஞ்சம் கேட்டால் புகார் செய்யுங்கள் – எண்களை அறிவித்தது தநா அரசு

அரசு அலு​வல​கங்​களில் யாராவது பணிகளைச் செய்ய கையூட்டு கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார்
அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ச​ப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.அதன்​படி,அரசு அலு​வலர்​கள் யாராவது இலஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக 94981 80936 என்ற வாட்​சப் எண்​ணில் புகார் கொடுக்​கலாம் என்று அரசு தற்​போது அறி​வித்​துள்​ளது.

ஊழலைத் தடுக்​கும் நடவடிக்​கைகளை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில் இந்த வசதி அறி​முகம்
செய்​யப்​பட்​டுள்​ளதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அனைத்து துறை​களின் செயலர்​கள்,இயக்​குநர்​கள்,மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தலை​மைச்செயலர்
எம்​.​சாய்​கு​மார் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்….

மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​கள் மற்​றும் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் இலஞ்ச ஒழிப்பு விழிப்​புணர்வு அறி​விப்புப் பலகைகளை கட்​டா​யம் காட்​சிப்​படுத்த வேண்​டும்.

அதில்,இலஞ்​சம் வாங்​கு​வதும்,கொடுப்​பதும் குற்​றம் என்ற வாசகம் தெளி​வாக​வும்,மக்​கள் பார்க்​கும் வகை​யிலும் காட்​சிப்​படுத்​தப்பட வேண்​டும்.இதுத​விர,தமிழிலும்,ஆங்​கிலத்​தி​லும் புகார் அளிக்​கும் நடை​முறை​கள் இடம்​பெற்ற மாதிரி அறி​விப்புப் பலகை​யும் அலு​வல​கங்​களில் வைக்​கப்படவேண்​டும்.

அரசுத் துறை​களின் அதி​காரப்​பூர்வ இணை​யதளங்​களி​லும் வாட்​சப் புகார் எண் மற்​றும் இலஞ்ச ஒழிப்​புத் துறை​யின் (ஊழல் தடுப்​பு,கண்​காணிப்பு இயக்​குநரகம் – DVAC) இணை​யதள முகவரியை வெளி​யிட வேண்​டும்.

வாட்​சப் மட்​டுமின்​றி, dvac@nic.in என்ற மின்​னஞ்​சல் முகவரி மூல​மாக​வும்,044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்​கள் மூல​மாக​வும் பொது​மக்​கள் இலஞ்​சம் தொடர்​பான புகார்​களைத்
தெரிவிக்​கலாம்.

எழுத்​துப்​பூர்​வ​மான புகார்​களை ‘இயக்​குநர், இலஞ்ச ஒழிப்​புத் துறை, 293, எம்​கேஎன் சாலை, ஆலந்​தூர்,
சென்​னை-16’ என்ற முகவரிக்கு நேரிலோ,அஞ்​சல் மூல​மாகவோ அனுப்​பலாம்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Leave a Response