நாம் தமிழர் பெண் வேட்பாளர்களை இழிவாகப் பேசிய மனநல மருத்துவர் – குவியும் கண்டனங்கள்

நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 20 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கிய கட்சி என்று பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இருபது பெண் வேட்பாளர்கள் படங்களையும் போட்டு,

இவ்வளோ பொம்புளை புள்ளைங்களை ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான் யா.

எமப் பய

என்று ஒரு நபர் பதிவு போட அந்தப் பதிவைப் பகிர்ந்த மனநல மருத்துவர் ஷாலினி, கூடவே,

ஆண்கள் இனிக்கப் பேசினால் பெண்கள் மயங்கி விடுவார்கள்

என்றும் பதிவிட்டிருந்தார்.

இதனால் அவருக்குக் கடும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக,

தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.. தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சனையை கொண்டு செல்வோம். இது போன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது.

என்று நாம் தமிழர் இணையதளப் பாசறை அறிவித்துள்ளது.

பெண்களைப் போகப் பொருளாக கருதி கருத்து தெரிவித்து இருக்கிற மருத்துவர் ஷாலினி பெண் இனத்திற்கே ஒரு அவமான சின்னம் என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Response