நயன்தாராவுக்கும் அவருடைய காதலருக்கும் .. – ராதாரவி விளக்கம்

கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த சர்ச்சை தொடர்பாக விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் குறிப்பிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

ராதாரவி பேச்சு பெரும் சர்ச்சையானதால், இது வரவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடாது என்று திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,

நடிகை நயன்தாராவை பற்றி நான் பேசுவதற்கு இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

அவருக்கும் அவர் காதலருக்கும் மனவருத்தத்தை தந்திருந்தால் – நயன்தாராவும் அவரை திருமணம் முடிக்க இருக்கிற விக்னேஷ் சிவனுக்கும் நான் என் மன வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

விருப்பப்பட்டால் என்னை அவர்கள் நேரில் சந்திக்கலாம்.இல்லை நான் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் தருகிறேன்.

திமுகவில் இருந்து என்னை இடைநீக்கம் செய்வதற்கு விளக்கம் கேட்டால் உரிய விளக்கம் தருகிறேன்.அவர்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே விலகிக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response