டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஞான அருள்மணி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக மைக்கேல் ராயப்பன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர். சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தைத் தயாரித்தவர். அதனால் நடிகர் சிம்பு மீது புகார் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சிம்பு ரசிகர்கள் அவருக்கு எதிராகப் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதென்கிறார்கள்.