அறிவழகனின் நம்பிக்கையை மெய்யாக்குவாரா நயன்தாரா..?


மலையாள நடிகைகள் தான் தமிழ் மற்றும் இங்கிருந்து சென்று தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகிகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.. ஆனால் ஒருசில மலையாள நடிகைகள் நமக்கு நம்ம ஊரே போதும் என கேரளாவிலேயே தங்கி விடுகின்றனர்.. மலையாள நடிகை மஞ்சு வாரியரும் அந்த பட்டியலில் இருப்பவர் தான்..

இந்தநிலையில் தான் குற்றம் 23 படத்தை தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்தி இயக்குனர் அறிவழகன் எடுக்கவிருக்கும் படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது இந்த படத்திலிருந்து சில தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக மஞ்சு வாரியர் விலகிவிட்டார். அதனால் தற்போது அவருக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நயன்தாரா தனது படத்தில் நடிக்க நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளார் அறிவழகன். இதுகுறித்து நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் அறிவழகன், இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்.

Leave a Response