ஷாருக்கானின் மேக்கப்மேனிடம் ஆலோசனை கேட்க தயாராகும் விஜய்சேதுபதி..


வித்தியாசமான கேரக்டர்களை ஏற்பதிலும் அதற்கு தேவைப்படும் பட்சத்தில் வித்தியாசமான கெட்டப்புகளை போடுவதிலும் விஜய்சேதுபதி ஒருபோதும் தயக்கம் காட்டியதே இல்லை.. இதோ இப்போது அவர் நடித்துள்ள கருப்பன் படத்தில் கூட எட்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது..

ஆனால் இவை எல்லாம் இங்கே உள்ளூர் மேக்கப்மேனை வைத்து செய்துகொள்ள முடிந்த விஷயங்கள்.. தற்போது விஜய்சேதுபதியின் 25ஆவது படமாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் சீதக்காதி படத்தில், 75, 50, 30 என மூன்று விதமான வெவ்வேறு வயதுடைய தோற்றங்களில் நடிக்க இருக்கிறார்.

இவற்றில் 75 வயதுடைய கேரக்டருக்கு ஹாலிவுட் மேக்அப்மேனை பயன்படுத்த உள்ளனர். இதற்காக விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஹாலிவுட் மேக்அப் கலைஞர் கிரேக் கேனம் என்பவரை சந்திக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

ஹாலிவுட்டில் மிசஸ் டவுட்பயர், டிராகுலா படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்த கிரேக் கேனம்தான் ஷாருக்கானின் பேன் மற்றும் கபூர் அன்ட் சன்ஸ் போன்ற ஹிந்தி படங்களுக்கும் மேக்கப் கலைஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response