தூசு தட்டப்பட்டு ரிலீஸுக்கு தயாராகும் விஜய்சேதுபதி படங்கள்..!


விஜய்சேதுபதி என்னதான் மார்க்கெட் வேல்யூ உள்ள ஹீரோ என்றாலும் அவர் நடித்த இரண்டு படங்கள் வேறு சில காரணங்களால் ரிலீஸாக முடியாமல் பேட்டியிலேயே முடங்கி கிடக்கின்றன.. ஒன்று சீனுராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’.. மற்றொன்று ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இயக்கிய மெல்லிசை என இரண்டு படங்கள் சில வருடங்களாக ரிலீஸாகாமல் இருக்கின்றன.

விஜய்சேதுபதியின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் மேற்கூறிய இரண்டு படங்களுக்கும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தியவர்கள் இறங்கி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தற்போது இடம்பொருள் ஏவல் படத்தை அதை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், மெல்லிசை படத்தை ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனமும் வெளியிடும் வேளைகளில் இறங்கியுள்ளனராம்.

Leave a Response