கைவிடப்பட்டதா ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’..?


நடிகர்சங்க கட்டடம் கட்டும் நிதிக்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பதாக பிரபுதேவா டைரக்சனில் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இந்தப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் அவர்கள் சொன்ன தொகை அந்த கட்டட நிதிக்கு போகும் என்று என விஷால் கூறியுள்ளார்..

இந்தப்படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் ஒரே கதாநாயகி மட்டும் தான்.. தற்போது வனமகன் படத்தில் அறிமுகமாகி இருக்கும் சாயிஷா சைகல் தான் இந்தப்படத்தின் நாயகி.. மறைந்த இயக்குனர் சுபாஷ் தான் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். விஷாலுக்கு கார்த்திக்கும் சம முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளாராம்..

இந்தப்படத்தை தமிழ் சினிமாவுக்கு ஒரு ‘ஷோலே’ மாதிரி உருவாக்க இருக்கிறார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி.. இந்தப்படத்தின் வேலைகள் இதுவரை இன்னும் துவங்கப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது. விஷால், கார்த்தி, பிரபுதேவா ஆகியோர் வேறு படங்களில் பிசியாக இருக்கிறார்கள்..

ஆனால் படக்குழுவினரோ இந்த தகவலில் உண்மையில்லை என மறுத்துள்ளனர்.. விரைவிலேயே படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறுகிறார்கள்.

Leave a Response