
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று வெளியிட்டிருக்கும் பதிவில்….
தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய்,ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர்,ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டுதான் தவெக கட்சி ஆரம்பித்ததாக துபாய் வாழ் தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா சிஎம் சார்?
நடிகர் விஜயால் கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக எம்பி ஹேமாமாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா சிஎம் சார்?
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட ஹட்சன் பால் நிறுவனத் தலைவர் கோட்டையில் விஜய்யை சந்தித்த மர்மம் என்ன? அடுத்தநாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றிக் கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா சிஎம் சார்?
தமிழக மின் உற்பத்தியை பாதியாகக் குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 மெகாவாட் மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக,பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு ஆந்திரரேட்டிகேங் உங்களை ஆந்திரா அழைத்துச் செல்கிறதா சிஎம் சார்?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை மிக அதிகவிலையான 35 ரூபாய் கொடுத்து வாங்குகிறது.இன்று முதல்வர் விஜய் ஆந்திரா செல்கிறார்.
இந்த நேரத்தில் அப்பாவு வெளியிட்டிருக்கும் இந்தப் பதிவு பெரும் கவனம் ஈர்த்துள்ளது.


