என்னைத் தொட்டுப்பார்க்க முடியுமா? – விஜய்க்கு நயினார் சவால்

மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து தமிழ்நாடு பாசக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மதுராந்தகத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது….

முதல்வர் விஜய் காலை 9 மணிக்கு சட்டசபை வருகிறார். 5 மணி வரை இருக்கிறார்.அந்த நேரத்தில் அவர் ரீலஸ் போட்டு நேரத்தைச் செலவழிக்கிறார்.இரண்டு மூன்று அமைச்சர்கள் உடன் மட்டும் அவர் பேசி வருகிறார்.அவர்கள் நீங்கள்தான் அடுத்தகட்ட பிரதமர், நீங்கள் அமைதியாக இருங்கள்.நாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறோம் என்கின்றனர்.பிரதமர் என்பது அவ்வளவு சாதாரணமா?

தற்போது தவெக அரசு ஊழல் செய்து வருகிறது.அவருடைய இருக்கையை மாற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.

தவெக அரசு காலையில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது,மாலையில் அதை வாபஸ் பெறுகிறது.தற்போது ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நடைபெற்ற விசயம் இதற்கு உதாரணம்.

இவர் எதற்கு இலண்டன் சென்றார், யாருடன் சென்றார், நான் ஏதாவது சொல்வேன், நீங்கள் மீடியாவில் வேறு மாதிரி செய்தி போடுவீர்கள். அதைப் பார்த்து என்னை ஏன் கைது செய்யவில்லை என சிலர் பேசுவார்கள். என்னைத் தொட்டுப் பார்க்க முடியுமா? தொட்டுத்தான் பாருங்களேன்.

இந்தத் தேர்தலில் தவெகவிற்கு சாவு மணி அடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் விஜய்யின் தாய் குறித்து அவதூறாகப் பேசினார் என்கிற குற்றச்சாட்டு நயினார் நாகேந்திரன் மீது வைக்கப்பட்டது.அவர் மீது புகாரோ,கைது நடவடிக்கையோ இல்லையே ஏன்னென பலரும் கேள்வி எழுப்பினர்.அதனடிப்படையிலேயே என்னைத் தொட்டுப்பார்க்க முடியுமா? என விஜய்க்கு வெளிப்படையாக சவால் விட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

Leave a Response