‘வடசென்னை’யில் இருந்து விஜய்சேதுபதி விலகிய காரணம் இதுதான்..!


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக பேச்சு அடிபட்டது.

ஒருதரப்பில் இந்த செய்தி பொய் என்று கூறப்பட்டாலும், மறுபக்கம் இது வெறும் வதந்திதான் என்று கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் சேதுபதி ‘வடசென்னை’ படத்தில் விலகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விலகியதற்கு யாருடனும் எந்த மனஸ்தாபம் இல்லை என்றும், கால்ஷீட் பிரச்சினையாலேயே இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

வடசென்னை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை.

ஆனால் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால், இப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட தேதியும் தள்ளிப்போனதால், இதில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Response