ரஜினிகாந்த் தற்போது லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன் படத்தின் 2ம் பாகமான 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் சார்பில் இலங்கையின் வவுனியாவில் சுமார் 150 வீடுகள் கட்டப்பட்டு, அவை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் விழா யாழ்ப்பாணத்தில் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வேண்டும் என லைகா நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அதனை ஏற்று அவரும் இலங்கை செல்வதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்வு ரஜினி படத்திற்கான விளம்பர யுக்தி தான் என்றும் பரவலாக பேசப்பட்டது..
அதனால் இதற்கு விடுதலைச் சிறுத்தைகள், பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து, தனது இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்நிலையில், இலங்கை பயணத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.. அவரது முடிவை வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.