செல்வராகவன் படம் தாமதமாவது ஏன்..?

Director Selvaraghavan Photos Pictures Stills

பொதுவாக இயக்குனர் செல்வராகவனை செலவு ராகவன் என்று சொல்லும் அளவுக்கு ஆவர் இயக்கம் படங்கள் தயாரிப்பளருக்கு மிகுந்த செலவு வைப்பது வாடிக்கைதான். படங்களின் பட்ஜெட் ஒன்றும் அப்படி பெரிதாக வந்துவிடப்போவதில்லை. படத்தை இயக்கி முடித்து வெளியிட தாமதமாவது தான் செலவுக்கு காரணம்.. இன்னும் சில படங்கள் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நின்றுபோவது தனிக்கதை..

ஆனால் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை படம் கிட்டத்தட்ட போஸ்ட் புரடக்சன் பணிகளை எல்லாம் தாண்டி சென்சாருக்கும் அனுப்பும் அளவுக்கு வந்துவிட்டது.. ஆனாலும் ரிலீஸ் பற்றிய எந்த அறிவிப்போ அறிகுறியோ எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் காத்திருப்பதாகவும் சென்சார் விரைவில் முடிந்ததும் பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் செல்வராகவன் கூறியுள்ளாராம்..

Leave a Response