சூர்யா படத்தில் கதாநாயகியானார் சாய் பல்லவி..!


மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘பிரேமம்’ படம் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்த ‘மலர்’ டீச்சராக நடித்தவர் தான் சாய் பல்லவி.. சாய்பல்லவியின் மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது சூர்யா தானாம். நடிக்க வருவதற்கு முன்பிருந்தே சூர்யாவின் ரசிகையான சாய்பல்லவிக்கு சூர்யாவுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பது ஆசை. கனவு என்று கூட சொல்லலாமாம்.

இதோ அந்த ஆசை தற்போது சூர்யாவின் 36வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் நிறைவேறி இருக்கிறது. செல்வராகவன் இயக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

Leave a Response