சூர்யா-செல்வா புதிய பட வேலைகள் புத்தாண்டில் துவங்கியது..!


சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா, சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 36வது திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்கியுள்ளது

அருவி, தீரன் அதிகாரம் ஒன்று என எப்போதும் தரமான படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. அதிகமாக எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வேலைகள் மங்களகரமான புத்தாண்டான இன்று துவங்கியது.

மேலும் வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்

Leave a Response