விஷாலை வீட்டிற்கு வராதே என அவரது தந்தையே சொன்னது ஏன்..?


நடிகர் சங்க தேர்தலைப்போலவே பரபரப்பான காட்சிகள் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் அரங்கேறி வருகின்றன. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல், வரும் ஏப்-2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 5 அணியினர் போட்டியிடுகின்றனர்.

விஷால் அணி சார்பில் விஷால் தலைவர் பதவிக்கும், துணை தலைவர்கள் பதவிக்கு பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், கௌரவ செயலாளர்கள் பதவிக்கு மிஷ்கின், ஞானவேல்ராஜாவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர் பிரபுவும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 15 பேரும் போட்டியிட உள்ளனர். இதற்கான விஷால் அணியின் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் விஷால் பேசும்போது, என்னுடைய தந்தை “ ஐ லவ் இந்தியா “ என்ற படத்தை எடுத்தார். என் தந்தை மகாபிரபு போன்ற வெற்றி படங்களை எடுத்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு Lab யில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன். அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்ததுதான் என்றார். அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன் நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம்.

என்னுடைய தந்தைக்கு நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்காது இனிமேல். நீ தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கிறாய் , உன்னை எதிர்த்து நிற்ப்பது எல்லாம் என்னுடைய நண்பர்கள் தான் , நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர், தெலுங்குவிலும் உறுப்பினர். நீ இந்த தேர்தலில் நிற்கிறாய் என்றால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கால் கிரவுண்டோ அல்லது அரை கிரவுண்டோ இடத்தை அளிக்க வேண்டும். இதை செய்தால் நீ நம் வீட்டிற்கு வா அல்லது , வராதே என்றார் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன்” என கூறியுள்ளார் விஷால்.

Leave a Response