‘துருவங்கள் பதினாறு’ இயக்குனருக்கு கௌதம் மேனன் சொன்ன உபதேசம்..!


2016ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் திரையுலகத்தைச் சேர்ந்த பலராலும் பாராட்டப்பட்ட படம் ‘துருவங்கள் பதினாறு’. அப்படத்தை யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். அவருடைய இரண்டாவது படமாக ‘நரகாசுரன்’ படத்தை ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, நாக சைதன்யா நாயகர்களாக நடிக்க உள்ளார்கள். தற்போது இந்தப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனனும், தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனனை தன்னுடைய குருவாகவே பார்க்கிறார் கார்த்திக் நரேன். இதனால் கௌதம் மேனன் தன்னுடன் இணைந்து தயாரிப்பது குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் மகிழ்ச்சியாக உள்ளார்.

அதே சமயம் அவரிடம் ஒரு விஷயம் குறித்து கௌதம் மேனன் கருத்து தெரிவித்தாராம். “சிலர் உங்களை அதிகமாக மதிப்பிட்டிருப்பார்கள், சிலர் உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பார்கள். அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று சொன்னாராம்.

Leave a Response