
இயக்குனர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இயக்கி நடித்துள்ள படம் அச்சமில்லை… அச்சமில்லை… சாந்தினி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை முத்துகோபால் சொந்தமாக தயாரித்தார் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் படத்தை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது தனது குரு அமீரிடம் வந்தார். எடுத்தவரை படத்தை பார்த்த அமீர் அதனை தானே தயாரிப்பதாக கூறிவிட்டார்.
இந்தப்படம் திருப்பூரில் சாயபட்டறை கழிவுகளால் மக்களும், விவசாயிகளும் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக கொண்ட படம். படத்திற்கு வலு சேர்ப்பதற்காக அமீர் விவசாயிகள் சங்கத் தலைவராக நடித்துள்ளார்.
அமீர் நடித்த காட்சிகள் 15 நிமிடங்கள் இடம் பெறுகிறது. இந்த கேரக்டரில் அவர் புரட்சிகரமான அரசியல் கருத்துக்களை பேசுகிறார். திருப்பூர் பகுதி விவசாயிகளின் குரலாக ஒலிக்கிறார் அமீர். பல வருட இடைவெளிக்கு பிறகு அமீர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


